இந்தியா

”இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது” : வக்ஃபு சட்டத்திருத்த மசோதா இந்தியா கூட்டணி MPக்கள் கடும் எதிர்ப்பு!

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணி MPக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

”இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது” :  வக்ஃபு சட்டத்திருத்த மசோதா இந்தியா கூட்டணி MPக்கள் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

அதனால்தான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததுபோல் இன்று வக்ஃபு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால், "வக்ஃப் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானதாகவும், மத சுதந்திரத்திற்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது. இம்மசோதா இஸ்லாமியம் சாராதவர்களையும் இஸ்லாமிய ஆலைகளில் நிர்வகிக்க வழி வகுக்கிறது. இதே போல், அயோத்தியாவின் நிர்வாக குழுவில் வேறு மதத்தினரை நியமிக்க முடியுமா? " என கூறியுள்ளார்.

அதேபோல் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே,"மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும். எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஹலோ பேருக்கு அனுப்ப வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.இப்படி இந்தியா கூட்டணி எம்.பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்ஃபு மசோதா தாக்கல் செய்தார்.

banner

Related Stories

Related Stories