இந்தியா

828 மாணவர்களுக்கு HIV தொற்று : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

828 மாணவர்களுக்கு HIV தொற்று : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுராவில் பா.ஜ.க தமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில்,828 மாணவர்களுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 47 மாணவர்கள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த தொற்று பரவலுக்கு மாணவர்களிடையே இருக்கும் போதை மருந்து பழக்கமே காரணம் என மூத்த அதிகாரிகள் கூறுகின்றன.

banner

Related Stories

Related Stories