இந்தியா

”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : மோடி தொகுதியான வாரணாசியில் மாணவர்கள் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வாரணாசியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” :  மோடி தொகுதியான வாரணாசியில் மாணவர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இச்சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாகவும், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேபோல், ”நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை.

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories