இந்தியா

”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்” : ராகுல் காந்தி எம்.பி புகழாரம்!

மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் என ராகுல் காந்தி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார்.

”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்” : ராகுல் காந்தி எம்.பி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தேசிய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் அதன் சிற்பியாக விளங்கியவர். இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கவுதம், தேசிய ஓ.பி.சி கூட்டமைப்பு தலைவர் ரத்தன்லால் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ”கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவில் நானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பல முறை கலைஞரைச் சந்தித்து உள்ளேன். அவரோடு இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்கிறேன். கலைஞரின் ஆலோசனைகள் பல சமயத்தில் தனது அரசியலுக்கு உதவியாக இருந்தது. இந்த நாளில் தி.மு.கவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர். அவரது வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே நீடித்த முத்திரையைப் பதித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories