இந்தியா

மகாராஷ்டிரா பாடத்திட்டத்தில் பகவத் கீதை, மனுதர்மம் : கடும் எதிர்பால் பின்வாங்கிய மாநில கல்வித்துறை !

மகாராஷ்டிராவில் பள்ளிக்குழந்தைகளுக்கான பாடத்திட்ட வரைவில் பகவத் கீதை மற்றும் மனுதர்மம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 மகாராஷ்டிரா பாடத்திட்டத்தில்  பகவத் கீதை,  மனுதர்மம் : கடும் எதிர்பால் பின்வாங்கிய மாநில கல்வித்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

மறுபக்கம் இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டை மதத்தீவிரவாதிகளிடம் அளிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி அரசின் பல்வேறு அமைப்புகளில் இந்துத்துவவாதிகளை நுழைக்கும் திட்டத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது. அப்படி நுழைந்தவர்கள் பள்ளி பாடத்திட்டங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணித்து வருகின்றனர்.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் பள்ளிக்குழந்தைகளுக்கான பாடத்திட்ட வரைவில் பகவத் கீதை மற்றும் மனுதர்மம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில், 3வது வகுப்பில் இருந்து 12 வது வகுப்பு வரை பள்ளிக்குழந்தைகளுக்கான பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

 மகாராஷ்டிரா பாடத்திட்டத்தில்  பகவத் கீதை,  மனுதர்மம் : கடும் எதிர்பால் பின்வாங்கிய மாநில கல்வித்துறை !

மத நூல்கள், ஆர்யபட்டா, சாகா, யோகா, இந்திய ரிஷிகள் போன்றவர்கள் குறித்த பாடபகுதிகள் இடம்பெற்றுள்ளது. பண்டைய பாரம்பர்யத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் பகவத் கீதை, மனுதர்மம் மற்றும் இந்து துறவி ராம்தாஸ் சுவாமி ஆகியோர் குறித்த பாடங்களும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், இறுதி பாடத்திட்டம் தயாரிக்கும் முன்பு பாடத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது .

banner

Related Stories

Related Stories