இந்தியா

”மக்கள் பணத்தை பல கோடி கொள்ளையடித்த மோடியின் நண்பர் அதானி” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

”மக்கள் பணத்தை பல கோடி கொள்ளையடித்த மோடியின் நண்பர் அதானி” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் உதவியுடன் தரமற்ற நிலக்கரியை வாங்கி அதிக லாபத்திற்கு விற்று அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேட்டை Financial Times வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

அதில், 2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. அதாவது 3500 கிலோ கலோரி திறன் கொண்ட நிலக்கரியை வாங்கி அதை 6000 கலோரிக்கு தமிழ்நாடு மின்வாரியத்திடம் விற்பனை செய்துள்ளது.

அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நிலக்கரியை அதிக விலைக்கு விற்று பல கோடிக்கு அதானி நிறுவனம் முறைகேடாக லாபம் ஈட்டியுள்ளது.

மேலும் 2021 மற்றும் 2023 க்கு இடையில், சந்தை விலையை விட அதிகமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்காக, இடைத்தரகர்களுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதானிக்குழுமம் வழங்கியதாக Financial Times சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் வெளியிட்டுள்ள x சமூகவலைதளத்தில், ”, "பா.ஜ.க ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஊழலின் மூலம், மோடியின் அன்பு நண்பர் அதானி நிறுவனம் குறைந்த விலை நிலக்கரியை மும்மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது.

அதன் விலையை பொதுமக்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து செலுத்தி எவ்வளவு டெம்போக்கள் என்பதை பிரதமர் கூறுவாரா? இந்த வெளிப்படையான ஊழலை ED, CBI மற்றும் IT அமைதியாக இருந்துள்ளன. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு இந்த மெகா ஊழல் குறித்து இந்தியா கூட்டணி அரசு விசாரிக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories