இந்தியா

ஆளுநர் உத்தரவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் : சர்வாதிகாரத்திற்கு கிடைத்த பதிலடி!

கேரள பல்கலைக்கழகத்தில் ABVP மாணவர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமித்த ஆளுநரின் உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆளுநர் உத்தரவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் : சர்வாதிகாரத்திற்கு கிடைத்த பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரள பல்கலைக் கழகத்திற்கு 8 மாணவர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்க கோரி அதற்கான பட்டியலை மாநில அரசு ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு அனுப்பியது.

ஆனால் இந்த பட்டியலை ஆளுநர் ஏற்க மறுத்து, பா.ஜ.கவின் ABVP மாணவர் அமைப்பைச் சேர்ந்த 4 மாணவர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டார்.

பின்னர் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி மாணவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆளுநர் உத்தரவை ரத்து செய்தது.

மேலும் அடுத்த ஆறு வாரத்திற்குள் தகுதி வாய்ந்த மாணவர்கள் பட்டியலை தயாரித்து சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் வரவேற்றுள்ளார். மேலும் ஆளுநர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்கள் என்ற எண்ணத்திற்கு இந்த தீர்ப்பு பதிலடியாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories