இந்தியா

”பொய்களின் தொற்றுநோயை பரப்பி வரும் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

பா.ஜ.கவை இந்தியா கூட்டணி வீழ்த்தும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”பொய்களின் தொற்றுநோயை பரப்பி வரும் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் சிர்சா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குமாரி செல்ஜாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், ”தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் பொய்களை கூறி பொய்களின் தொற்றுநோயை பரப்பி வருவதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். பிரதமர் மோடியால் ஒரு உண்மையைக் கூட பேச முடியவில்லை.

2004 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி தோற்றதுபோல் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் ஆண்டும் இதே வரலாறு மீண்டும் நிகழும். பா.ஜ.கவை இந்தியா கூட்டணி வீழ்த்தும். 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள 428 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories