இந்தியா

நீட் தேர்வில் மோசடி : உதவிய தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி !

நீட் தேர்வில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வில் மோசடி : உதவிய தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஆள்மாறாட்டம், தேர்வு நாள் வெளியாவது என தொடர்ந்து நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகளும் நடைபெற்றது வருகிறது.எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் கூட ஏராளமான முறைகேடு புகார்கள் பதிவாகின. இந்த நிலையில், நீட் தேர்வில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வில் மோசடி : உதவிய தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி !

ராஜஸ்தான் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் துணை கண்காணிப்பாளராக அதே பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்களிடம் ரூ.7 லட்சம் முன்பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, சம்பந்தப்பட்ட 6 மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்த நிலையில், பிற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டனர். பின்னர் விடைத்தாளை அளித்த பிறகு, 6 மாணவர்கள் நிரப்பாமல் விட்டிருந்த வினாக்களுக்கு துஷார் பட் சரியான பதிலை தேர்வு செய்துள்ளார். இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், துணை கண்காணிப்பாளர் துஷார் பட், இடைத்தரகர்கள் பரசுராம் ராய், ஆரிப் வோரா ஆகியோரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories