இந்தியா

”மிரட்டும் தேர்தல் ஆணையம்” : மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

”தேர்தல் ஆணையம் யார் பக்கம் நிற்கிறது?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

”மிரட்டும் தேர்தல் ஆணையம்” : மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 13 ஆம் தேதி 96 தொகுதிகளில் 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில் 3 கட்ட தேர்தல் முடிந்த உடனே தேர்தல் ஆணையம் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் காலதாமதமாக வாக்கு சதவீதத்தை வெளியிடுவது ஏன்? எனவும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். தற்போது கூட 3 ஆம் கட்ட தேர்தல் முடிந்து 4 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து சந்தேகங்கள் உள்ளதாகக் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குத் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ”நான் கடந்தவாரம் எழுதி கடிதம் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு. தேர்தல் ஆணையத்திற்கு அல்ல. எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அளித்த புகார்களுக்குப் பதில் அளிக்காமல் இந்த கடிதத்திற்குப் பதில் அளித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு புறம் குடிமக்களின் கேள்வி உரிமையை மதிப்பதாகக் கூறும் தேர்தல் ஆணையம் மறுபுறம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காகக் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.

ஆனால் ஆளும் கட்சித் தலைவர்களால் அப்பட்டமாக நடத்தப்படும் வகுப்பாவதாம், மதரீதியான கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories