இந்தியா

”ராகுல் காந்தியின் பிரச்சாரங்களை தினமும் உற்று கவனியுங்கள்” : ப.சிதம்பரம் பதிலடி!

ராகுல் காந்தி நாள்தோறும் பிரச்சாரங்களில் பேசுவதை உற்று கவனிக்குமாறு பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”ராகுல் காந்தியின் பிரச்சாரங்களை தினமும் உற்று கவனியுங்கள்”  : ப.சிதம்பரம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தொகுதி 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மக்களை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் ஒரே கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.

இந்த இந்தியா கூட்டணி உருவானதில் இருந்தே பா.ஜ.கவின் தோவில் தொடங்கிவிட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளும் பா.ஜ.கவின் தோல்வியை உறுதிபடுத்தி வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

தோல்வி பயம் காரணமாகத்தான் 10 ஆண்டு சாதனைகளை எதுவும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பேசாமல், மக்கள் மத்தியில் மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று ஒரு நாட்டின் பிரதமரே மத வெறுப்புணர்வுடன் பேசுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 10 ஆண்டுகளாக அதானி, அம்பானி குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாத மோடி இன்று முதல் முறையாக வாய் திறந்து இருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்திலேயே மோடியும் அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காண்பித்து இந்த அரசு யாருக்கான அரசு என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அப்போது கூட பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அதற்கு பதில் ராகுல் காந்தியை இடைநீக்கம் செய்தது மோடி அரசு. மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அதானி, அம்பானிகளுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என விமர்சித்தபோது கூட மோடியும், பா.ஜ.கவும் பதில் பேசவில்லை.

ஆனால் இன்று ”தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி அம்பானி, அதானியை பற்றி பேச மறுக்கிறது? என்ன காரணம்? அவர்களிடம் இருந்து இந்த தேர்தலுக்கு எவ்வளவு கறுப்பு பணத்தை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது” என பிரதமர் மோடி பேசியுள்ளார். தோல்வி பயமே இவரை தற்போது பேச வைத்துள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், ”அம்பானி மற்றும் அதானியை காங்கிரஸ் உடன் தொடர்புபடுத்தி, மோடி பேசியதை கண்டு நானும் மற்றவர்களை போல அதிர்ச்சியடைந்துள்ளேன்.

பிரதமருக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கமோ, தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் பழக்கமோ அல்லது யூடியூபில் செய்தி பார்க்கும் பழக்கமோ இருக்கிறதா? அப்படி இல்லையெனில், ராகுல் காந்தி நாள்தோறும் பிரச்சாரங்களில் பேசுவதை உற்று கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories