இந்தியா

ஐஐடியிலேயே கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாமல் 22% மாணவர்கள் உள்ளனர்- மோடி ஆட்சியை விமர்சித்த திரிணாமூல் MP!

ஐஐடியிலேயே கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாமல் 22% மாணவர்கள் உள்ளனர்- மோடி ஆட்சியை விமர்சித்த திரிணாமூல் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றிய பாஜக ஆட்சியில் மக்கள் பல துன்பங்களை அனுபவித்தது வருகின்றனர். விலையேற்றம், வேலையில்லா திண்டாட்டம் என அனைத்தும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் மக்கள் விரோதமான பல்வேறு சட்டங்களையும் ஏற்றி, பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. அதோடு, மக்கள் மத்தியில் மதம் சார்ந்த வெறுப்பு பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

உலக பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில், இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாகவும் இந்தியா பெரிய அளவு பாதிப்பை கண்டுள்ளது. கொரோனா காலத்தில் அனைவரும் மருந்து ஊசிக்கு ஏங்கி கொண்டிருக்க, பாஜக அரசோ, ஒலி எழுப்பியும், விளக்கு ஏற்ற சொல்லியும் கொரோனாவை விரட்ட பாடுபட்டது.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஏற்றியதோடு, அதற்கு GST விதித்து துன்பப்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஊழல்,கொலை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் என பலவையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

ஐஐடியிலேயே கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாமல் 22% மாணவர்கள் உள்ளனர்- மோடி ஆட்சியை விமர்சித்த திரிணாமூல் MP!

அதோடு PM CARES நிதி, தேர்தல் பத்திர முறைகேடு என ஊழல்களும் பாஜக செய்து வருகிறது. இப்படி தொடர்ந்து மக்கள் விரோத, மோசமான அரசை எதிர்த்து மக்களும் தற்போது தங்கள் எதிர்ப்புகளை காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். மக்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதாக மோடி அளித்த வாக்குறுதி, தண்ணீரில் எழுதி வைத்தது போல் ஆகிவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் குறித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்து வருகிறது. எந்த பிரதமர் வேலை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தரோ, அதே பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், பஜ்ஜி கடை வையுங்கள் என்று கேலி செய்தார்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் 22% டெல்லி IIT மாணவர்களுக்கு வேலையில்லை என்று ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் பலரும் மிகவும் கடினப்பட்டு IIT-ல் படித்து முடித்த நிலையில், அவர்கள் இப்போது வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சில நிறுவனங்கள் IIT-ல் கேம்பஸ் இன்டெர்வியூ நடத்த விருப்பம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு கேம்பஸ் இன்டெர்வியூ வைக்கும் முக்கிய நிறுவனங்கள், சிலருக்கு பணி நியமனத்தை வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அதோடு கடந்த 4 ஆண்டுகளாக பணியில் இருக்கும் IIT ஊழியர்களுக்கும் சம்பள உயர்வும் வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

ஐஐடியிலேயே கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாமல் 22% மாணவர்கள் உள்ளனர்- மோடி ஆட்சியை விமர்சித்த திரிணாமூல் MP!

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு வரை ஒரு நிறுவனம் 1 - 8 பேரை பணிக்கு எடுத்து வந்தது. ஆனால் இப்போது வெறும் 1 - 2 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது. பல லட்சம் கொடுத்து படித்தும் எங்களுக்கு அதற்கு ஏற்றார் போல் பலன் கிடைக்கவில்லை. மேலும் பல நிறுவனங்கள் ஆண்டுக்கு 3.6 லட்சம் முதல் 6 லட்சம் வரை மட்டுமே ஒரு ஊழியருக்கு கொடுக்கிறது." என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஐஐடியில் படிக்க வேண்டுமென்றால், அதற்காக பயிற்சி வகுப்புக்கு பலரும் செல்வர். அந்த பயிற்சி வகுப்பிற்கு என்று பலரும், நுழைவு தேர்வு எழுதி, அதன்மூலம் ஐஐடியில் சேர்ந்து படிப்பர். இப்படி மிகவும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களில் பலரும் தற்போது வேலையின்றி இருக்கும் நிகழ்வு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று தெரியவந்த நிலையில், தற்போது டெல்லி ஐஐடியிலும் இதே நிலைமை உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி ஐஐடி மாணவர்களின் நிலைமை குறித்து பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஐஐடியிலேயே கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாமல் 22% மாணவர்கள் உள்ளனர்- மோடி ஆட்சியை விமர்சித்த திரிணாமூல் MP!

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தனது சமூக வலைதள பக்கத்தில், "மோடியின் கடந்த 10 ஆண்டு கால வேலையில்லா திண்டாட்டத்தின் அபாயகரமான மற்றும் மோசமான நிலை இதுதான். மோடி தனது லோக்சபா 2024 தேர்தல் உரைகளில் வேலைகள் மற்றும் வேலையின்மை பற்றி பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். "ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்" என்று அவர் அளித்த வாக்குறுதி போலியானது என்று தெரியவந்ததை அடுத்துதான், இதுகுறித்து பேசுவதையே நிறுத்திவிட்டார்.

டெல்லி ஐஐடியில் கடந்த 5 ஆண்டுகளில் 22% மாணவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மேலும், ஐஐடி பட்டதாரிகளின் சராசரி சம்பளம் கடந்த 4 ஆண்டுகளாக எந்த உயர்வுமின்றி தேக்க நிலையில் உள்ளது.

வேலை இல்லாத காரணத்தால் இந்திய இளைஞர்கள் மத்தியில் மோடி மற்றும் பாஜக மீது பெரும் கோபம் உள்ளது. மோடியின் பொய்களும் திறமையின்மையும் பிடிபட்டதால், இப்போது வெறுப்பைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மோடிக்கு தைரியம் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories