இந்தியா

ஆட்சி மாற்றத்திற்கு பின் EVM, PM Cares குறித்த தகவல்கள் வெளிவரும் : பரகலா பிரபாகர்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வாக்கு இயந்திரம் (EVM) மற்றும் பிரதமர் நிதி (PM Cares) ஆகியவை குறித்து பல செய்திகள் வெளியே வரும் : பரகலா பிரபாகர், பொருளாதார வல்லுநர்.

ஆட்சி மாற்றத்திற்கு பின் EVM, PM Cares குறித்த தகவல்கள் வெளிவரும் : பரகலா பிரபாகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜா ரத்தினம் கலையரங்கில் சென்னை சிந்தனையாளர் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், திமுக மகளிர் அணி தலைவியுமான விஜயா தாயன்பன் ஏற்பாட்டில்,

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தான தேசிய பேச்சுவார்த்தை என்னும் பெயரில் நடைபெற்ற கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளரும், இந்து குழும முன்னாள் தலைவருமான ‘தி இந்து’ என்.ராம், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசிய ‘தி இந்து’ என்.ராம்,

ஆட்சி மாற்றத்திற்கு பின் EVM, PM Cares குறித்த தகவல்கள் வெளிவரும் : பரகலா பிரபாகர்!

“தேர்தல் நடைமுறை விதி அமலில் உள்ள போதும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து காங்கிரஸ் - தி.மு.க.விற்கு எதிராக பேசி வருகிறார், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பீகாரில் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் - தி.மு.க ஆயோத்தியில் ராமர் கோவில் திறப்பிற்கு எதிராக இருந்ததாக கூறியுள்ளார், இது தேர்தல் நடைமுறை விதிக்கு எதிரானது மட்டுமல்ல, குற்றமும் கூட தான்.

இந்த பாஜக அரசு பத்திரிகை சுதந்திரம், மாணவர்களுக்கான சுதந்திரம் என மக்களுக்கான சுதந்திரத்தை முற்றிலும் பறித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 19 பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டுள்ளனர், காரணம் என்னவென்றால் ஊழலுக்கு எதிராக, குற்றங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டனர் என்று தான்.

பாஜக அரசு, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் அரசுக்கு எதிராக செயல்பட ஆளுநரை வைத்துள்ளது, அப்படியானவர்களில் ஒருவர் தான் ஆர்.என்.ரவி, அவருக்கு ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் மூலமாக சொன்னால் தான் புரியும்.

பா.ஜ.க ஒரு தேர்தலிலும் 40 சதவீத வாக்குகளை பெற்றது கிடையாது, கடந்த தேர்தலில் கூட 37.3 சதவீத வாக்குகளை தான் பெற்றது. கடந்த 10 பொது தேர்தலில் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவீதம் 21.8 மட்டுமே, காங்கிரஸ் கடந்த 10 பொது தேர்தலில் 34.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - கேரளாவில் பாஜகவிற்கு என்ன முடிவு கிடைத்ததோ, அதே முடிவு தான் இந்த தேர்தலிலும் கிடைக்கும்.

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மிக சிறந்த ஒன்று.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவர் அமைப்பையும் நாம் குறைவாக எண்ணி விட கூடாது, ஒன்றையும் சொல்ல வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்” என தெரிவித்தார்.

பரகலா பிரபாகர் - பொருளாதர வல்லுநர் (நிர்மலா சீதாராமன் கணவர்)

ஆட்சி மாற்றத்திற்கு பின் EVM, PM Cares குறித்த தகவல்கள் வெளிவரும் : பரகலா பிரபாகர்!

“வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடாக இந்தியா கணக்கிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இவ்வளவு மோசமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை.

1% இந்தியர்கள், 22% பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறார்கள். அந்த 1% இந்தியர்கள் 44% சொத்துகளை0 சொந்தமையாக்கியுள்ளனர். இதை இன் ஈகுவாலிட்டி (InEquality) ஆய்வறிக்கை சொல்லியுள்ளது.

34 ஆயிரம் வேலைக்கு 1 கோடியே 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர் அதுவும் இஸ்ரேலுக்காக காசா பகுதிக்கு செல்ல,இஸ்ரேல் பிரதமரும் இந்திய பிரதமரும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள்.

அதனால் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு குறிப்பாக காசா பகுதிக்கு பணிக்கு ஆட்களை இந்தியாவிலிருந்து எடுக்க வேண்டும் என்று எண்ணி ஹரியானா, உத்தரப் பிரதேம், அது தொடர்ந்து மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஆள் சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில் பங்கேற்ற இளைஞர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு இங்கே வேலையில்லாமல் சாவதை விட அங்கு சென்று பணி செய்து போருக்கு மத்தியில் சில ரூபாய்களை குடும்பத்திற்காக அனுப்பலாம் என்று முடிவெடுத்ததாக தெரிவித்தனர்.

இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்தவர்களை, Anti Indian, காலிஸ்தானியர்கள் என்று சொன்னார்கள். ஆனால், அது குறித்து விவாதம் என்பது 5 நிமிடம் கூட அப்போது நடைபெறவில்லை. பின்னர் பஞ்சாப் மாநில தேர்தல் நடக்கும் போது அது திரும்பப் பெறப்பட்டது. இதற்காக Anti Indian, காலிஸ்தானியர்கள் பட்டியலில் பிரதமரும் வருவாரா என்று தெரியவில்லை.

பாஜக அரசு - சிறுபான்மையினரை வஞ்சிக்கிறது, மோடியின் ஒன்றிய அரசில் ஒருவர் கூட சிறுபான்மை அமைச்சர் இல்லை, குஜராத்தில் கூட யாரும் இல்லை, கர்நாடகாவில் கூட யாரும் இல்லை.

G20 என்ற ஒரு மாநாடு இந்தியாவில் நடைபெற்றது, ஆதில் உலகம் ஒரு குடும்பம் என்று சொன்னார்கள்., ஆனால் மணிப்பூர் அதில் சேர்க்கப்படவில்லை அப்படி தானே?

பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம், அரசியலில் ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம், இது தான் விஷ்வ குருவா? இது தான் இவர்களது விஷ்வ ரூபம்.

மணிப்பூரில் நடப்பதை போல இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், கவனமாக இருக்க வேண்டும், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் செங்கோட்டையில் கூட இது நடக்கலாம்.

PM Cares நிதி நடைமுறையில் என்ன நடக்கிறது என்று தெரியாது. அது குறித்த விவரம் RTI -யில் கூட கிடைக்காது அது தான் நிலை, தேர்தல் பத்திரங்கள் குறித்து வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள், எல்லாத்திற்கும் நீதிமன்றத்தை மதிப்போம் என்று சொல்லும் இவர்கள் இதில் மட்டும் அதை சொல்ல தயங்குவது ஏன்? ஒரு அமைச்சர் கூட இதை பற்றி பேசுவது இல்லை.

ஆகவே, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தான் வாக்கு இயந்திரங்கள், மற்றும் PM cares குறித்த பல செய்திகள் வெளியே வரும்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பரகலா பிரபாகர், “நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஒன்றிய அரசுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் மிகப்பெரிய அளவில் தேர்தல் பத்திர முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது, இவர்கள் செய்த பல்வேறு ஊழல்களுக்கு மக்கள் தக்க பதில் சொல்வார்கள்.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் வாக்களிக்கும் இயந்திரத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து நிச்சயம் மக்களுக்கு தெரிவிக்கப்படும், அதேபோல பிரதமரின் PM Cares Fund-ல் என்ன நடக்கிறது என்ற விவரங்களும் தேர்தலுக்குப் பின்னர் சொல்லப்படும்” என்றார்.

banner

Related Stories

Related Stories