இந்தியா

காவல்நிலையத்தில் புகுந்து போலிஸாரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் புகுந்து போலிஸாரை பா.ஜ.க அமைச்சர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தில் புகுந்து போலிஸாரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் நரேந்திர சிவாஜி படேல். இவரது மகன் அபிக்யான். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அபிக்யான் காரில், திரிலங்கா பகுதியில் சென்றுள்ளார்.

அப்பாது இருசக்கர வாகனத்தில் வந்த பத்திரிகையாளருக்கும் அபிக்யானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளரை அமைச்சரின் மகன் தாக்கியுள்ளார். இதை தட்டிகேட்டு வந்த அருகே இருந்த உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியையும் அபிக்யான் தாக்கியுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஷாபுரா காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வந்த அமைச்சரின் மகன் அபிக்யான் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அபிக்யான் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் உடனே காவல்நிலையம் சென்று மகனை மீட்டுள்ளார். மேலும் மகனிடம் தகராறு செய்த 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். தவறு செய்த மகனை கண்டிக்காமல் மீட்பதற்கு பா.ஜ.க அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories