இந்தியா

பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!

பீகாரில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து இழுபறியிலிருந்து வந்த பீகார் மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதியில் போட்டியிடுகிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சி.பி.ஐ எம்.எல் 3 தொகுதியிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.எ.ம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தற்போது பீகாரிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது பா.ஜ.க கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

banner

Related Stories

Related Stories