தமிழ்நாடு

”திமுக அரசின் சாதனைகளை கம்பீரமாக கூறுவேன்” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

”திமுக அரசின் சாதனைகளை கம்பீரமாக கூறுவேன்” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது தி.மு.கவின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா ? என இந்தியா கூட்டணி தலைமையில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், " மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கூறிதான் நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதேபோல் மதுரையில் கம்பீரமாக நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலகத் தமிழர்கள் போன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என தி.மு.க அரசின் ஒவ்வொரு சாதனை திட்டங்களையும் கம்பீரமாகக் கூறிதான் ஓட்டு கேட்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories