இந்தியா

உலக நாடுகளிடமிருந்து விமர்சனங்களை பெறும் ஒன்றிய பா.ஜ.க! : தடுமாறும் பாசிசக்காரர்கள்!

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான நீண்ட நெடிய உறவு, பா.ஜ.க.வின் பாசிச போக்கின் வழி, சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டும் அபாயம்.

உலக நாடுகளிடமிருந்து விமர்சனங்களை பெறும் ஒன்றிய பா.ஜ.க! : தடுமாறும் பாசிசக்காரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரித்து வருவதால், வெகுவாக உலகின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என பா.ஜ.க அறைகூவல் விட்டு வருகிறது.

இது, முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால் மட்டுமே, நடந்திருக்கிறது என்றும் முன்மொழிந்து வருகிறது.

ஆனால், உலக வங்கியின் புள்ளியியல் விவரங்கள் அதை மறுத்துள்ளன. உலக வங்கியின் இணையதள பக்கத்தில், ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விழுக்காடு, ஆண்டுகளை அடிப்படையாக வைத்து வகுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விழுக்காடு, 7.4 ஆகவே இருந்தது. இந்த வளர்ச்சி, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் கணிசமாக குறைந்து, பின்பு 2021 ஆம் ஆண்டில் உச்சம் தொட்டு, தற்போது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

உலக நாடுகளிடமிருந்து விமர்சனங்களை பெறும் ஒன்றிய பா.ஜ.க! : தடுமாறும் பாசிசக்காரர்கள்!

இவ்வாறு, நாட்டின் வளர்ச்சி விகிதம் சரியும் நிலையிலும், முதலாளித்துவத்தின் அடிப்படையில் பெறும் முதலீடுகளால், தன்னை அதிவேகமாக வளரும் நாடாக அடையாளப்படுத்தி வருகிறது பா.ஜ.க.

எனினும், ஒன்றிய அரசு, தனக்கு வகுத்து கொண்ட இலக்கான 3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற இடம், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு பின் தங்கிய இடமே.

காரணம், இந்தியா அமெரிக்காவுடன் வைத்துள்ள வணிக தொடர்பு. இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய, அளப்பற்கரிய பங்கு வகிக்கும் நாடுகளில், அமெரிக்காவிற்கு என தனி இடமே இருக்கிறது.

இக்காரணங்கள், இந்திய மக்களின் வாழ்வியலுக்கும், பொருளியலுக்கும் நேரடி தொடர்புடையது இல்லை என்ற போதிலும், ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு, தேவையாகவே அமைந்துள்ளன.

மேலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின், மோடி அவ்வப்போது அமெரிக்கா சென்று, அங்குள்ள கார்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகை வழங்கு, இந்தியாவிற்கு முதலீடு செய்ய அழைத்து வருகிறார்.

இவை தவிர்த்து, அமெரிக்காவும் பல்வேறு தேவைகளுக்காக இந்தியப் பகுதிகளை பயன்படுத்தி வருகிறது. இந்திய கனிமங்கள் பெருமளவில், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய செயல்களால், அமெரிக்கா பல நேரங்களில், இந்தியாவின் நடவடிக்கைகளை பெரிதும் விமர்சிக்காமல் அமைதி காத்து வந்தது.

எனினும், அந்த நிலைப்பாடும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை, பெரிதளவு விமர்சிக்காத அமெரிக்காவும், பாசிச பா.ஜ.க.வின் செயல்களை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

உலக நாடுகளிடமிருந்து விமர்சனங்களை பெறும் ஒன்றிய பா.ஜ.க! : தடுமாறும் பாசிசக்காரர்கள்!

இந்தியாவில் அமல்படுத்தப்படும், இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (CAA), மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ஊக்குவிக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்று, ஓரிரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையில், வெளிப்படை தன்மை நிலைக்க வேண்டும். சட்ட ஒழுங்கு காப்பற்றப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது.

தற்போது, இம்மாதத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்கா, காங்கிரஸ் கட்சியின், வங்கி கணக்கு முடக்கம் குறித்தும், தனது மாற்று கருத்தை தெரிவித்துள்ளது.

இதனால், ஒன்றிய பா.ஜ.க அரசிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில், சற்று தருக்கம் உண்டாகியுள்ளது.

ஆகையால், உலக நாடுகளை, அமெரிக்காவின் உதவியுடன், வேகமாக வளரும் பொருளாதாரம் என காட்சிபடுத்தும், ஒன்றிய பா.ஜ.க.வின் தன்மை, அம்பலப்பட்டு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பல நேரங்களில், உலக நாடுகளின் பல்வேறு செயல்களில், அமெரிக்காவின் மூக்கு நுழைக்கப்படுவது விமர்சிக்கும் வகையில் அமைந்தாலும், இந்தியாவின் பாசிச நடவடிக்கைகளில், அமெரிக்காவின் கருத்து, ஆக்கப்பூர்வ கருத்தாகவே எண்ணப்படுகிறது.

இவ்வாறு, கடந்த காலங்களில், கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தன்மஞ்சீத் சிங் மற்றும் ஜெர்மன் அரசிடமிருந்தும், ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories