இந்தியா

குஜராத்தில் பின்னடைவை சந்திக்கும் பா.ஜ.க : பெரும்பான்மை பெறும் முனைப்பில் இந்தியா கூட்டணி!

குஜராத் என்றாலே நினைவிற்கு வருவது பா.ஜ.க, மோடி தான் என்கிற அளவிற்கு பா.ஜ.க காட்சிப்படுத்திக் கொள்ளும் வேளையில், மக்களின் ஆதரவு காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது.

குஜராத்தில் பின்னடைவை சந்திக்கும் பா.ஜ.க : பெரும்பான்மை பெறும் முனைப்பில் இந்தியா கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என அடையாளப்படும் ஒரு மாநிலம், சுமார் 29 ஆண்டுகள் ஒரே கட்சியுடைய ஆட்சியின் கீழ் இயங்கி வருகிறது என்றால் அது குஜராத் தான்.

1995 முதல், குஜராத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, சிறுபான்மையினர்களுக்கு எதிராக பல வன்முறைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதில், தவிர்க்கமுடியாத வன்முறையாக 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் அறியப்படுகிறது.

இக்கலவரத்திற்கு பின், அதுவரை இறங்கி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குகள், ஏறுமுகமாக மாறியது. இந்த ஏற்றம், 2017 சட்டமன்ற தேர்தலில், சுமார் 41.44% வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் வகையில் அமைந்தது.

எனினும், பா.ஜ.க.வின் EVM குளறுபடிகளால், 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் வாக்குகள் மீண்டும் சரிவை சந்தித்தது. ஆகையால், பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நேர்ந்தது. இந்நிலையில், குஜராத்திலும், காவி மங்கும் நிலை உருவாகியுள்ளது.

குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டது போல், அண்மை காலங்களில் ஏழைகளும் நசுக்கப்பட்டு வருகின்றனர். பீகார் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கூட, உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளை திரை கொண்டு மூடியது பா.ஜ.க.

குஜராத்தில் பின்னடைவை சந்திக்கும் பா.ஜ.க : பெரும்பான்மை பெறும் முனைப்பில் இந்தியா கூட்டணி!

இவை தவிர்த்து, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, மக்களின் மனநிலை மாறி வருகிறது. இதன் காரணமாக, பா.ஜ.க.வின் நிர்வாகிகள் பலர், தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டு வருகின்றனர்.

கேதன்பாய் என்கிற மூன்று முறை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், பா.ஜ.க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, சில மணிநேரங்களில் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார்.

இத்தகைய, தடுமாற்றங்களால் பா.ஜ.க. மீது மக்கள் கொண்டிருந்த நம்பக நிலைப்பாட்டிலும் தடுமாற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த சரிவு, மேலும் அதிகரிக்கும் வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தின் விடுதியில், தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலும், அதற்கான பா.ஜ.க மாநில அரசின் மந்த நடவடிக்கையும் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories