இந்தியா

”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!

மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் பா.ஜ.க அரசு விளையாடுகிறது என மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே  விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆளும் பல்வேறு மாநிலங்களிலும், பா.ஜ.க கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களிலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், துப்பாக்கி கலாசாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிராவில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தகிசர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கொசால்கர். சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வினோத் கொசால்கரின் மகனான இவர், முன்னாள் கவுன்சிலர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவசேனா கட்சி பிரிந்த நிலையில், தற்போது உத்தவ் தாக்கரே அணி சிவசேனா கட்சியில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் அபிஷேக் கொசால்கருக்கும், உள்ளூரில் பிரபலமான மோரீஸ் பாய் என்பவருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளது. மேலும் மோரீஸ் பாய் சிவசேனாவின் இணைய இருந்த நிலையில், அதனை அபிஷேக் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மோதல் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், இதில் சில பெரிய தலைவர்கள் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே  விமர்சனம்!

இந்நிலையில் மோரீஸ் பாய் இலவச சேலை கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதில் அபிஷேக் கொசால்கருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதோடு இந்நிகழ்ச்சி முகநூல் பக்கத்தில் லைவாக வீடியோவும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் திடீரென இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மோரீஸ் பாய் துப்பாக்கியால் அபிஷேக் கொசால்கரை சுட்டுக் கொன்றுள்ளார். பிறகு அவரும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் முகநூல் பக்கத்தில் லைவாகி வெளியாக காண்போர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவத்தை அடுத்து மகாராஷ்டிராவில் குண்டர்கள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்,"பா.ஜ.கவின் திருட்டுத்தனத்தால் கட்டமைக்கப்பட்ட மகாராஷ்டிர அரசியல் சட்டத்தின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. அமலாக்கத்துறையால் உருவான பா.ஜ.க அரசு மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் குண்டர் ஆட்சியைப் பரப்பி விளையாடுகிறது." என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories