இந்தியா

பா.ஜ.க MPக்கு 6 மாதம் சிறை தண்டனை : லக்னோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பா.ஜ.க MP ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பா.ஜ.க MPக்கு 6 மாதம் சிறை தண்டனை : லக்னோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீட்டா பகுகுணா ஜோஷி. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரயாக்ராஜ் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று லக்னோ நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதில் பா.ஜ.க எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.1100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்குச் சிறைத் தண்டனை உத்தரவு விதிக்கப்பட்டபோது அவரது எம்.பி பதவியில் இருந்து நீக்க பா.ஜ.க அரசு எந்த அளவிற்கு வேகம் காட்டியதோ அதேபோல் ரீட்டா பகுகுணா ஜோஷி மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories