இந்தியா

கத்தி முனையில் வங்கியில் ரூ.8.54 லட்சம் கொள்ளை : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் கிராம வங்கி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி ரூ.8.54 லட்சம் கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கத்தி முனையில் வங்கியில் ரூ.8.54 லட்சம் கொள்ளை : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் கிராம வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் வங்கியிலிருந்து ரூ.8.54 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர்.

இதையடுத்து சோதனை சாவடி ஒன்றில் போலிஸார் கொள்ளையனை சுட்டு பிடித்துள்ளனர். மேலும் கொள்ளையனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பதும் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வங்கியில் புகுந்து மர்ம நபர் கத்தியை காட்டி கொள்ளையடிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories