இந்தியா

”இந்திய சரித்திரத்தை மாற்றி எழுத நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நாராயணசாமி கண்டனம்!

இந்திய சரித்திரத்தை மாற்றி எழுத ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

”இந்திய சரித்திரத்தை மாற்றி எழுத நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நாராயணசாமி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து, வேண்டும் என்றே மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். தற்போது "நாம் சுதந்திரம் பெறுவதற்குக் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் முக்கிய காரணம்" என்று கூறியுள்ளார் ஆர்.என்.ரவி. இதையடுத்து ஆளுநரின் இந்த கருத்திற்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய சரித்திரத்தை மாற்றி எழுத நினைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, "தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

உச்சநீதிமன்றமே வலியுறுத்திய பிறகும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் பேசி வருகிறார்.

அண்மையில் கூட விடுதலை போராட்டத்தில் மகாத்மா காந்தி நடத்திய அறப்போராட்டத்தை உலகமே பாராட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மகாத்மாவின் போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மனநலம் பாதித்தவர் போல் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் கூறி வருகிறாரர். இந்திய சரித்திரத்தை மாற்றி எழுத நினைக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி"என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories