இந்தியா

“தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” : ஆளுநருக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி !

திருவள்ளுவர் ஆண்டு 2055 -ஐ, விழாவாக கொண்டாடிவருகிற நாளில், காவி அரசியலையும் ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வருகிறது ஆரிய கும்பல்

“தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” : ஆளுநருக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருக்குறளுக்கு உரை எழுதப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்ட ஆரிய திணிப்பு, 2024 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிற சூழல், கடும் சிக்கலை ஒழிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

திருவள்ளுவராண்டு 2055 (கி.பி. 2024) -ஐ, தை இரண்டாம் நாளன்று உலகளாவிய தமிழ் மக்களும், அரசுகளும் சிறக்க கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவியின் ‘X’ வலைதளப் பதிவில், திருவள்ளுவர் நாள் வாழ்த்தோடு, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்திருப்பதான படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது மற்றொரு சர்ச்சையாகியுள்ளது.

உலக பொதுமறையான திருக்குறள், சாதி, மதம், இனம் என எவ்வித கட்டுப்பாடுகளும் அற்ற, அனைத்து மக்களுக்கும் உகந்த, கற்க வேண்டிய ஓர் படைப்பாக உள்ளது. எனினும், அப்படைப்பு தமிழ் மொழியில் இயற்றப்பட்டுள்ளதால், உலகளாவிய தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சமூகத்தின் சிறப்பு வாய்ந்த திருக்குறள், உலக அளவில் சிறக்கப்பெற்றுள்ளதைப் பொறுத்துக்கொள்ள இயலாத ஆரிய சிந்தனையாளர்கள், திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் ஆரிய சிந்தனைகளைப் புகுத்தி வருகின்றனர்.

காலநிலைக்கேற்ப, கடந்த 1000 ஆண்டுகளில் ஆரிய கருத்தியல் கொண்ட தமிழறிஞர்களின் வழி, திருக்குறளில் கருத்துகள் திரிக்கப்பட்டிருப்பது, திரு. பொழிலன் அவர்கள் தொகுத்த, திருக்குறள் ஒப்பாய்வுரை நூலின் வழி வெளிப்படுகிறது. மேலும், ஆரிய திணிப்பிற்கு எதிரான பல போராட்டங்களும் தொடர்ந்து, தமிழக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், இதுவரை மறைமுகமாக திணிக்கப்பட்டு வந்த ஆரிய கருத்துகள், தற்போது வெளிப்படையாக காவி துணிக் கொண்டு திணிக்கப்படுகிற சூழல் பெருகிக்கொண்டிருக்கிற நிலையில், இது போன்ற செயல்களின் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட மதவாத பாஜக, ஆர்.எஸ்.எஸ் அணியினருக்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள X பதிவில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories