இந்தியா

”மதம் என்பது தனிப்பட்ட விஷயம்” : ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது!

ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மதம் என்பது தனிப்பட்ட விஷயம்” :  ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாகக் கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாகத் திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையிலிருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த விழாவிற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று முதலில் அறிவித்தது.

”மதம் என்பது தனிப்பட்ட விஷயம்” :  ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது!

இதையடுத்து காங்கிரஸ் கட்சி இந்த விழாவில் பங்கேற்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிஆகியோருக்கு அழைப்பு வந்தது.

நம்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ.க ஆர்.எஸ்.ஸ் நீண்ட காலமாக அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்டு வந்தது. அதன்படிதான் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக முழுமையடையாத ராமர் கோயிலை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர். 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டு சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories