இந்தியா

2023 ஆம் ஆண்டு 7000 மணி நேரம் இணையத்தை முடக்கிய பா.ஜ.க அரசு : 6 கோடி மக்கள் பாதிப்பு!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு 7000 மணி நேரம் இணையத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 7000 மணி நேரம் இணையத்தை முடக்கிய பா.ஜ.க அரசு :  6 கோடி மக்கள் பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு இணைய முடக்கம் பற்றி TOP 10 VPN என்ற நிறுவனம் பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2023 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7000 மணி நேரம் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உள்நாட்டு அமைதியின்மைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் இணைய முடக்கம் நடந்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சமூக ஊடகங்கள் நிறுத்தப்படுவது மிகவும் குறைவாக இருந்தாலும் மத விழாவின் போது மட்டுமே அதிகமாக இணைய தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் ஏற்பட்ட வன்முறை காரணமாக மே முதல் டிசம்பர் வரை 8 மாதம் இணையதளம் தடை செய்யப்பட்டு இருந்தது. பீகாரில் ஏப்ரல் மாதம் பல சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது என்று TOP 10 VPN அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இணைய முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் அடிப்படையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்றும் ரஷ்யா 4.02 பில்லியன் டாலர் செலவில் முதலிடத்தைப் பிடித்தது TOP 10 VPN நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையம் முடக்கப்பட்டதில் ரூ. 4821 கோடி செலவாகி உள்ளது. இணைய முடக்கத்தால் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories