இந்தியா

பூட்டி கிடந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு... 5 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக் நிகழ்வு !

பூட்டி கிடந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டி கிடந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு... 5 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக் நிகழ்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களுருவை அடுத்து அமைந்துள்ள சித்ரதுர்கா என்ற பகுதி. இங்கு வீடு ஒன்று பல ஆண்டுகளாக பூட்டி கிடந்துள்ளது. இந்த சூழலில் இங்கே வசிக்கும் நபர் ஒருவர் வீட்டுக்குள் மண்டை ஓட்டை கண்டதாக போலீசில் அதிர்ச்சி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கே வந்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டனர். வீட்டின் ஒரு அறையில் படுக்கையில் 2 பேரும், தரையில் 2 பேரும், மற்றொரு அறையில் ஒருவரும் என 5 பேர் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து உடனே தடயவியல் உதவியோடு மீட்ட அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பூட்டி கிடந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு... 5 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக் நிகழ்வு !

தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும்போது, அந்த வீட்டில் ஜகன்நாத் ரெட்டி (85), அவரது மனைவி பிரேமா (80), மகள் திரிவேணி (62), மகன்கள் கிருஷ்ணா (60), நரேந்திரா (57) ஆகிய 5 பேரும் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களை 2019-ம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதத்திற்கு பிறகு யாரும் பார்க்கவில்லை என்றும், அந்த வீடு பூட்டியே இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பூட்டி கிடந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு... 5 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக் நிகழ்வு !

அதோடு அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த அக்கம்பக்கத்தினர், வீடு பூட்டி கிடந்து 2 மாதத்திற்கு பிறகு ஒருநாள் யாரோ அந்த வீட்டில் உலாவி கொண்டிருந்தாக ஜன்னல் வழியாக பார்த்ததாகவும், ஆனால் இதுகுறித்து அப்போது சந்தேகம் எழவில்லை என்பதால் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தடயவியல் ஆய்வுக்கு பிறகே அவர்கள் எப்போது இறந்திருப்பார்கள் என்ற விவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பூட்டி கிடந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories