இந்தியா

இது வந்தே பாரத் ரயில்தானா ? கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால் பயணிகள் அதிருப்தி.. காரணம் என்ன ?

இது வந்தே பாரத் ரயில்தானா ? கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால் பயணிகள் அதிருப்தி.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் ரயில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை – கோவை, சென்னை – பெங்களூரு, சென்னை – மைசூர், சென்னை – திருநெல்வேலி, சென்னை – விஜயவாடா என ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இதுவரை 6 ரயில்கள் சென்றநிலையில், இது 7-வது ரயிலாக இயக்கப்படுகிறது.

இது வந்தே பாரத் ரயில்தானா ? கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால் பயணிகள் அதிருப்தி.. காரணம் என்ன ?

ஆனால், அதிக கட்டணம் வசூல் செய்தாலும் வந்தே பாரத் ரயில் இலக்கை அடைய அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது என்ற விமரிசனம் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ஆந்திரா குப்பம் வழியாக பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் 410 கி.மீ தொலைவை 6 மணிநேரம் 40 நிமிடங்களில் கடக்கிறது.

அதே நேரம் வந்தே பாரத் ரயில் 380 கி.மீ. மட்டுமே பயணிக்கும் நிலையில் பெங்களூரு சென்றடைய 6 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. இத்தனைக்கும் வந்தே பாரத் ரயில் குறைவான இடங்களிலேயே நிற்கிறது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் பயணிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories