இந்தியா

ஒரே வீட்டில் கணவர், காதலனோடு வசித்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன?

ஒரே வீட்டில் கணவர், காதலனோடு வசித்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத்தில் அமைந்துள்ளது பஹரம்பூர் என்ற கிராமம். இங்கு சிவம் குப்தா (26) - பிரியங்கா (25) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், சிவம் குப்தா டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் பிரியங்காவுக்கு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கர்ஜன் யாதவ் (23) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் சிவம் குப்தாவுக்கு தெரியவரவே, தனது மனைவியிடம் இதுகுறித்து கேட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் பிரியங்கா தனது குழந்தையுடன் காதலர் கர்ஜனுடன் சென்று விட்டார்.

ஒரே வீட்டில் கணவர், காதலனோடு வசித்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன?

வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வந்து பார்க்கையில், மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று அறிந்ததும் பதறினார். தொடர்ந்து இருவரையும் பல்வேறு இடங்களில் தேடிய சிவம் குப்தா, மனைவி அவரது காதலருடன் இருப்பதை தெரிந்துகொண்டார். இதையடுத்து அங்கு சென்ற அவர், மனைவியை சமாதானப்படுத்தியதோடு, அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கலாம் என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளாத மனைவி, பின்னர் காதலன், மற்றும் கணவருடன் ஒரே வீட்டில் வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி அனைவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே ஒரே ஒரு படுக்கையறை இருப்பதால் ஒரு நாள் காதலன், ஒரு நாள் கணவர் என பிரித்து அந்த அறையில் தூங்கினர். இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி தூங்க சென்ற கணவர் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் கணவர், காதலனோடு வசித்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன?

இதில் கோபம் கொண்ட கணவர், தனது மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் தூங்க சென்ற நிலையில், நள்ளிரவு நேரத்தில் தனது காதலன் உதவியோடு கணவரை தலையணை வைத்து கொலை செய்துள்ளார் மனைவி பிரியங்கா. இதைத்தொடர்ந்து மறுநாள் காலை எதுவும் தெரியாதது போல் கணவரின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் மனைவி.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் போலீசுக்கும் தகவல் தெரிவித்து, சிவம் குப்தாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகாரும் அளித்தனர். அதன்பேரில் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து காதலன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories