இந்தியா

மனைவியின் கண்களை கடித்து துப்பிய கொடூர கணவர்.. கர்நாடகத்தில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

குடிபோதையில் மனைவியின் கண்கள், மற்றும் கன்னத்தை கடித்து துப்பிய கணவரின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் கண்களை கடித்து துப்பிய கொடூர கணவர்.. கர்நாடகத்தில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகா மாவட்டத்தில் அமைந்துள்ள தக்ஷிணா கன்னடா பகுதியில் இருக்கிறது பெல்தங்கடி என்ற இடம். இங்கு சுரேஷ் (55) என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குடிபோதையில் இருக்கும் சுரேஷ், தனது மனைவி, மகளை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தும் வந்துள்ளார்.

இதனால் வீட்டில் தினமும் சண்டை வந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் இரவு நேரத்தில் குடிபோதையில் வெளியில் இருந்து வந்துள்ளார் சுரேஷ். அப்போது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த சுரேஷ், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை கொண்டு, அவரது மனைவியை தாக்கியுள்ளார்.

மனைவியின் கண்களை கடித்து துப்பிய கொடூர கணவர்.. கர்நாடகத்தில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

இதில் சட்டென்று மண்டை உடைந்து பெண்ணின் தலையில் இருந்து இரத்தம் வழியவே, மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார் சுரேஷ். அதோடு அவரது கன்னம் மற்றும் கண்களை வெறியுடன் கடித்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கத்திய அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே இந்த சண்டையை தடுக்க சென்ற மகளையும் கடுமையாக தாக்கியுள்ளார் சுரேஷ். மகள் மற்றும் மனைவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் படி விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி தப்பியோடிய கணவர் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் மனைவியின் கண்கள், மற்றும் கன்னத்தை கடித்து துப்பிய கணவரின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories