இந்தியா

ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: சிக்கிய டீக்கடைகாரர் - சார்ஜ் போடவந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: சிக்கிய டீக்கடைகாரர் - சார்ஜ் போடவந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இருக்கும் கிங்ஸ் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகே சத்யம் மிஸ்ரா (வயது 22) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு முன்னாள் அரசு அதிகாரி ஒருவரின் 23 வயது மகள் மன அழுத்த சிகிச்சைக்காக அடிக்கடி வந்துள்ளார்.

அப்படி வரும்போது சத்யம் மிஸ்ராவின் டீ கடையில் டீ அருந்துவதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த கடாயில் தனது செல்போனுக்கு அடிக்கடி சார்ஜும் போட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அதே போல சார்ஜ் போட அந்த டீ கடைக்கு சென்றபோது அங்கு மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் அங்கு இருந்த ஆம்புலன்ஸில் சார்ஜ் போடுவதாக சத்யம் மிஸ்ரா அந்த பெண்ணின் மொபைல் போனை வாங்கி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து செல்ல இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது சத்யம் மிஸ்ரா தனது நண்பனின் காரில், அந்தப் பெண்ணை இருக்கச் செய்துவிட்டு, செல்போனை வாங்கி வருவதாக கூறியுள்ளார்.

ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: சிக்கிய டீக்கடைகாரர் - சார்ஜ் போடவந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

பின்னர் சிறிது நேரத்தில் தனது நண்பர்கள் இரு வரோடு அங்கு வந்த சத்யம் மிஸ்ரா, அந்த பெண்ணை செல்போனை வாங்கி தருவதாக கூறி காரோடு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு மயக்கமருந்து கலந்த பானத்தை அவர்கள் கொடுத்துள்ளனர்.

அதனை அருந்திய சில நிமிடங்களில் அந்த இளம்பெண் மயங்கியதும், அந்த கும்பல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் ஒரு ஆள் நடமாட்டாம் இல்லாத இடத்தில அந்த இளம்பெண்ணை அந்த கும்பல் இறக்கி விட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து காவல்நிலையம் சென்ற இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட சத்யம் மிஸ்ரா, சுகைல் (வயது 23) ஆலம் ( வயது 31) ஆகியோரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories