இந்தியா

விபத்தில் உடைந்த டீசல் டேங்க்.. வெளியேற முடியாமல் தீயில் கருகி இரண்டு பேர் பலி : கர்நாடகாவில் கோரம் !

விபத்தில் உடைந்த டீசல் டேங்க்.. வெளியேற முடியாமல் தீயில் கருகி இரண்டு பேர் பலி : கர்நாடகாவில் கோரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் தேவகிரி பகுதியை சேர்ந்த மோகன் மாருதி பெல்கோன்கர் (24), மச்சே கிராமத்தைச் சேர்ந்த சமிக்ஷா தயேகர் (12) மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேர் அங்குள்ள பம்பரகா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு கார்ல் சென்றுள்ளனர்.

பின்னர் திருமணம் முடிவடைந்த நிலையில், மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது பெலகாவி மாவட்டத்தின் பம்பரகா என்ற இடத்தில் டிப்பர் லாரி மீது மோதி இவர்கள் சென்ற கார் பெரும் விபத்தில் சிக்கிக்கொண்டது.

இந்த விபத்தில் டிப்பர் லாரியில் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. அதோடு உடனடியாக அந்த தீ விபத்தில் சிக்கியுள்ள காரின் மீதும் பரவியுள்ளது. இதனிடையே காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் காயங்களுடன் வெளியேறியுள்ளனர்.

விபத்தில் உடைந்த டீசல் டேங்க்.. வெளியேற முடியாமல் தீயில் கருகி இரண்டு பேர் பலி : கர்நாடகாவில் கோரம் !

ஆனால், காரின் பின்பக்கத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் காருக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் தீ அவர்கள் மீதும் பரவியதால், காரின் பின்பக்கத்தில் இருந்த இரண்டு பெரும் உயிரோடு தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories