இந்தியா

41 தொழிலாளர்களை மீட்க உதவிய எலி வளை : அப்படி என்றால் என்ன? முழு விவரம் இங்கே!

41 தொழிலாளர்கள் மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

41 தொழிலாளர்களை மீட்க உதவிய எலி வளை : அப்படி என்றால் என்ன? முழு விவரம் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதையடுத்து வெளிநாட்டில் இருந்து ஆகர் ஏந்திரம் வரவழைத்து மீட்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றது. தொழிலாளர்கள் அருகே சென்ற போது ஆகர் ஏந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக, எலி வளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது.

பின்னர் கை வேலைப்பாட்டாகவே சுரங்க தொழிலாளர்கள் 13 மீட்டர் தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். பிறகு இந்த குழாய்கள் வழியாக ஒவ்வொரு தொழிலாளராக 41 பேரும் வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

41 தொழிலாளர்களை மீட்க உதவிய எலி வளை : அப்படி என்றால் என்ன? முழு விவரம் இங்கே!

இந்நிலையில் 41 தொழிலாளர்கள் மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் எலி வளை என்றால் என்ன என்பதை இங்குப் பார்ப்போம்:-

ஒரு ஆள் நுழையும் அளவுக்கு வளைந்தும் நெளிந்தும், பெரிதும், சிறிதுமாக எலி தோண்டுவதைப் போன்று தோண்டுவதுதான் எலி வளை முறையாகும். மேகாலயா போன்ற மாநிலங்களில் நிலக்கரி எடுக்க இந்த எலி வளை முறை பயன்படுத்தப்படுகிறது.

சைடு கட்டிங் மற்றும் பாக்ஸ் கட்டிங் என இரண்டு முறைகளில் எலி வளை தோண்டப்படுகிறது. சைடு கட்டிங் மலைச்சரிவின் பக்கவாட்டிலும், பாக்ஸ் கட்டிங் செங்குத்தாக ஆழமாக தோண்டப்படுவதாகும்.

2014ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எலி வளை முறைக்கு தடை விதித்தது. பிறகு 2015ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது. இந்த எலி வளை முறையை பயன்படுத்தித்தான் சுரங்கத்தில் சுக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories