இந்தியா

வேகமாக வந்த ரயில் - தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!

குஜராத்தில் ரயில்வே காவலர் தனது உயிரைப் பணயம் வைத்து முதியவர் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வேகமாக வந்த ரயில் - தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அதே தண்டவாளம் வழியாக வேகமாக விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த முதியவர் பதட்டத்துடன் இருந்துள்ளார்.

இதையடுத்து நடைமேடையிலிருந்த ரயில்வே காவலர் ஒருவர் இதைக் கவனித்த அடுத்த நிமிடமே கீழே இறங்கி முதியவரைத் தண்டவாளத்திலிருந்து இழுத்த, அடுத்த நிமிடமே இவர்கள் இருவரையும் ரயில் கடந்து சென்றது.

பிறகுத் தன் உயிரைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதியவர் உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு அங்கிருந்த பயணிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories