இந்தியா

அணு ஆராய்ச்சி மையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : தந்தையை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் !

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆராய்ச்சி மையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : தந்தையை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்யும் ஒருவர் அதே வளாகத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி மற்றும் 19 வயது மகள் ஆகியோர் மும்பை அருகில் உள்ள பால்கர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இவரின் மகள் அடிக்கடி தனது தந்தையை சந்திக்க அணு ஆராய்ச்சி மைய குடியிருப்புக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்கேயே சமையலும் செய்துள்ளார். அப்படி அந்த இளம்பெண் அங்கு செல்லும்போது தந்தையின் வீட்டுக்கு அருகில் குடும்பத்தோடு வசித்து வந்த அஜித் குமார்(23) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், வழக்கம்போல தந்தையின் வீட்டுக்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அங்கு சமையல் பொருள் இல்லாததால் அஜித் குமார் வீட்டுக்கு சென்று சமையல் பொருளை வாங்க சென்றுள்ளார். அங்கு அருண்குமாரின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் தனது நண்பர் பிரபாகர் என்பவரோடு வீட்டில் இருந்துள்ளார்.

அணு ஆராய்ச்சி மையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : தந்தையை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் !

அப்போது அந்த இளம்பெண் அங்கு வர, அவரிடம் பேசிக்கொண்டே மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்கு குடிக்க கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கமடைய அவரை அருண்குமார், பிரபாகர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அறிந்து தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அஜித் குமார் மற்றும் அவரின் நண்பர் பிரபாகர் ஆகியோரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories