இந்தியா

காதலருக்கு பணம் தேவைப்பட்டதால் போலி பாலியல் வன்கொடுமை நாடகம் : சொந்த வீட்டில் திருடிய மனைவி !

காதலரோடு சேர்ந்து போலி பாலியல் வன்கொடுமை நாடகம் நடத்திய தொழிலதிபரின் மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலருக்கு பணம் தேவைப்பட்டதால் போலி பாலியல் வன்கொடுமை நாடகம் : சொந்த வீட்டில் திருடிய மனைவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் துக்காராம் பாண்டே. தொழிலதிபரான இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இவரின் மனைவிக்கு புஷ்பேந்திரா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் புஷ்பேந்திராவுக்கு கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது கணவரிடம் கொள்ளையடிக்கலாம் என துக்காராம் பாண்டேவின் மனைவி புஷ்பேந்திராவுக்கு யோசனை கூறியுள்ளார். அதன்படி இருவரும் கொள்ளை அடித்து அதை வேறு யாரோ செய்ததாக கூறலாம் என திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி துக்காராம் பாண்டே தனது குழந்தைகளை அழைத்து வெளியே சென்றபோது புஷ்பேந்திரா அவரின் வீட்டுக்கு வந்து அங்கு துக்காராம் பாண்டேவின் மனைவியோடு சேர்த்து வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

காதலருக்கு பணம் தேவைப்பட்டதால் போலி பாலியல் வன்கொடுமை நாடகம் : சொந்த வீட்டில் திருடிய மனைவி !

மேலும், இந்த திருட்டு நாடகத்தை உண்மை என காட்ட, கொள்ளையடிக்க வந்த கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக கையில் அறுத்து, சிகரெட்டால் சூடு வைத்து துக்காராம் பாண்டேவின் மனைவி நாடகமாடியுள்ளார்.

பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் துக்காராம் பாண்டேவின் வீட்டில் சோதனை நடத்தியதோடு, அவரின் மனைவியை மருத்துவ சோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் போலிஸார் நடத்திய சோதனையில், தனது காதலரோடு சென்ற்து நடத்திய நாடகத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து புஷ்பேந்திராவைக் கைதுசெய்த போலிஸார், அவர் எடுத்துச் சென்ற பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories