இந்தியா

உடல்நலம் பாதித்த 70 வயது தாய் - சுடுகாட்டில் கைவிட்ட குடும்பம் : ஆந்திராவில் நடந்த கொடூரம்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட70 வயது தாயை பராமரிக்க முடியாமல் அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலம் பாதித்த 70 வயது தாய் - சுடுகாட்டில் கைவிட்ட குடும்பம் : ஆந்திராவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்திற்குட்பட்ட எரவுலபாடு கிராமத்தின் அருகே சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவற்று இருந்துள்ளார்.

இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் மூதாட்டி எங்கிருந்து வந்தார் என்பது குறித்துக் கேட்டனர். அப்போது அவர் நான் அருகே இருக்கும் எரவுலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தனதுக்கு வயதாகிவிட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டதால் தனது மகன் வெங்கடேஷ் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கொடுமைப் படுத்தி வந்ததை அவர்களிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மூதாட்டி குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அவர்கள் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர்.

பிறகு மூதாட்டியின் கணவர், மகன், மகள் ஆகியோரை போலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை செய்தனர். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங்க கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories