இந்தியா

தனியாக இருந்த மனைவி சுத்தியலால் அடித்து கொலை : சிறையில் இருந்து வந்ததும் கணவர் கோடூர செயல் !

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவரின் செயலால் அதிர்ச்சி.

தனியாக இருந்த மனைவி சுத்தியலால் அடித்து கொலை : சிறையில் இருந்து வந்ததும் கணவர் கோடூர செயல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 33). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த உதயன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, பின்னர் விவாகரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் ஊர்மிளா புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீஷ் (37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

சஜீஷ் அந்த பகுதியில் கோழிக்கடை கழிவுகளை வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இரண்டாவது திருமணம் முடிந்தும் ஊர்மிளாவுக்கும் சஜீஸ்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் சஜீஸ் ஊர்மிளாவை தாக்கி வந்ததால் கணவரை பிரிந்து ஊர்மிளா தனது தாயாரின் வீட்டில் இருந்து அந்த பகுதியில் வேளைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அடிக்கடி கணவர் கால் செய்து தன்னுடன் வந்துவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால், ஊர்மிளா அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் .

தனியாக இருந்த மனைவி சுத்தியலால் அடித்து கொலை : சிறையில் இருந்து வந்ததும் கணவர் கோடூர செயல் !

கடந்த மே 18ம் தேதி ஊர்மிளாவின் வீட்டிற்கு சஜீஷ் சென்று அவரை கொடூரமாக தாக்கிய நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சஜிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிறையில் இருந்துவெளியே வந்தவர் நேற்று காலை ஊர்மிளாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஊர்மிளாவை தான் கொண்டு வந்திருந்த சுத்தியால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஊர்மிளா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சஜிஸ் கைது செய்யப்பட்டார்.

banner

Related Stories

Related Stories