இந்தியா

பிரபல யூடியூப் Food Vlogger மர்ம மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி - போலிஸ் விசாரணை!

கேரளாவை சேர்ந்த பிரபல யூடியூப் food vlogger வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூப் Food Vlogger மர்ம மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி - போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ராகுல் என்.குட்டி. 32 வயது இளைஞரான இவர் Eat Kochi Eat என்ற சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் உணவுகள் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் தான் சாப்பிடும் உணவை வீடியோவாக வெளியிட்டு அதன் சுவை குறித்துப் பேசி ஒரு review வீடியோவாக வெளியிடுவார். இதனால் இவர் கேரள உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலிஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories