இந்தியா

பெங்களூரு சாலையில் ஓட ஓட கார் ஏற்றிகொல்லப்பட்ட நபர் : பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !

பெங்களூருவில் சாலையில் ஓட ஓட கார் ஏற்றிகொல்லப்பட்ட நபர் குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சாலையில் ஓட ஓட கார் ஏற்றிகொல்லப்பட்ட நபர் : பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெங்களூருவில் அஸ்கர் என்பவர் செகண்ட் ஹேண்ட் வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்., இவரிடம் அம்ரீன் நெவார் ரூ.4 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை வாங்கி, அதற்கு நீண்ட நாட்கள் ஆகியும் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இது குறித்து இருவருக்கும் பல முறை தகராறு இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்கர் இது குறித்து காவல் நிலையத்தில் அம்ரீன் மீது புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த அம்ரின் தன் மீதான புகாரை வாபஸ் வாங்குமாறு அஸ்கரிடம் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு அஸ்கர் மறுத்த நிலையில், அவரை கொலை செய்ய அம்ரின் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அஸ்கரை ஒரு இடத்தில் வந்து சந்தித்து பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என அம்ரின் கூறியுள்ளார். இதனை நம்பிய அஸ்கர் அந்த இடத்துக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அஸ்கரை தான் வந்திருந்த காரால் கொலை செய்ய அம்ரின் முயன்றுள்ளார். அஸ்கர் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையிலும் அவரை விடாது துரத்திச் சென்று காரை ஏற்றி கொலை செய்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பரபரப்பான புலகேசி நகர் சாலையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கு சம்மந்தப்பட்ட அம்ரீன் உட்பட மூன்று பேரை போலிஸார் கைதுசெய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories