இந்தியா

49 வயதில் பிரபல டீ நிறுவனத்தின் உரிமையாளர் மரணம் : தெருநாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட துயரம்!

தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்து பிரபல வாஹா பக்ரி டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

49 வயதில் பிரபல டீ நிறுவனத்தின் உரிமையாளர் மரணம் : தெருநாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல வாஹா பக்ரி டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இவர். இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டு அருகே கடந்த 15ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பரக் தேசாய். அப்போது தெருநாய்கள் அவரை துரத்தியுள்ளது. இதனால் அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பரக் தேசாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் அவரின் டீ தூள் ரசிகர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்து பிரபல டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories