இந்தியா

மருத்துவமனையில் உயிரிழந்த மகன் : உடலை 40 கி.மீ பைக்கில் எடுத்துச் சென்ற தந்தை - ஆந்திராவில் அவலம்!

ஆந்திராவில் மருத்துவமனையில் உயிரிழந்த மகனின் சடலத்தை 40 கி.மீ பைக்கில் அவரது தந்தை எடுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

மருத்துவமனையில் உயிரிழந்த மகன் :  உடலை 40 கி.மீ பைக்கில் எடுத்துச் சென்ற தந்தை -  ஆந்திராவில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்திற்கு உட்பட்ட பல்லே கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கப்பா. இவரது மகன் ருஷி. சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லிங்கப்பா மகனை 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதக சிறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

பின்னர் மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்திக் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மேலும் 108 ஆம்புலன்சில் இறந்தவர்கள் உடல் எடுத்துச் செல்லப்படாது என கூறி மறுத்துவிட்டனர்.

மருத்துவமனையில் உயிரிழந்த மகன் :  உடலை 40 கி.மீ பைக்கில் எடுத்துச் சென்ற தந்தை -  ஆந்திராவில் அவலம்!

இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த லிங்கப்பா தனது உறவினர் ஒருவரை மருத்துவமனைக்கு வரவைத்துள்ளார். பிறகு மகனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் சடலங்களை எடுத்து செல்ல போதுமான வாகன வசதிகள் இல்லாததால் இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வண்டியிலோ, தோளிலோ சுமந்து எடுத்துச் செல்லும் துயர சம்பவம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories