இந்தியா

பாம்பை கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி : சிக்கிய வேலைக்காரன் - கொடூர கொலையில் பின்னணி என்ன ?

பாம்பை கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பை கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி : சிக்கிய வேலைக்காரன் - கொடூர கொலையில் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோச்சேரா பிரவீன் (வயது 42). இவருக்கு லலிதா என்ற மனைவியும், இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். பிரவீனுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் தொடர்பு இருந்துள்ளது.

இதன் காரணமாக அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறி அந்த பெண்ணோடு இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோவத்தில் இருந்த பிரவீனின் மனைவி லலிதா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டில் வேலைபார்த்துவரும் சுரேஷ் என்பவரை சந்தித்து தனது கணவரை கொலை செய்தால் அவருக்கு நிறைய பணம் கொடுப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது சுரேஷ் மற்றும் அவரோடு இருந்தவர்களை வீட்டினுள் விட்டு அவர்கள் கொண்டுவந்த நாகப்பாம்பால் கணவரை கடிக்கவிட்டு அவரை கொலை செய்துள்ளார்.

பாம்பை கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி : சிக்கிய வேலைக்காரன் - கொடூர கொலையில் பின்னணி என்ன ?

பின்னர் காலை மாரடைப்பால் கணவர் இறந்ததாக அனைவரிடமும் கூறி லலிதா நாடகமாடியுள்ளார். எனினும் பிரவீனின் நாக்கில், பாம்பு கொத்திய காயம் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிரவீனின் மனைவி லலிதாவிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை காவலில் எடுத்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அவர் வேலைக்காரருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மனைவி லலிதா. வேலைக்காரர் சுரேஷ் மற்றும் அவருக்கு உதவிய 3 பேரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories