இந்தியா

கட்டும் போதே இடிந்து விழுந்த புதிய மேம்பாலம் : பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சியின் லட்சணம்!

மகாராஷ்டிராவில் புதிதாகக் கட்டும் போது மேம்பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டும் போதே இடிந்து விழுந்த புதிய மேம்பாலம் :  பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சியின் லட்சணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் சிப்லூன் பகுதி அருகே புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 46 தூண்களுடன் பிரம்மாண்டமாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலதின் கீழே யாரும் இல்லாததால் பெரிய உயர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பாலம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளில் சிக்கி சேதடைந்தது.

அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் மேம்பாலம் இடிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கட்டும்போதே மேம்பாலம் இடிந்து விழுத்தால் அதன் உறுதித்தன்மை மீது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் மேம்பாலம் கட்டுமானத்தில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories