இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு- ”பொய் சொல்லி மக்களை பிரிக்கும் பிரதமர் மோடி” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி, மக்களிடம் பொய் சொல்லிப் பிரிக்கப் பார்க்கிறார் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு- ”பொய் சொல்லி மக்களை பிரிக்கும் பிரதமர் மோடி” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பா.ஜ.க அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதனால், 7 எம்.பிகள் உள்ளடங்கிய 41 பேர் கொண்ட முதல் கட்டப்பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் கட்சிக்குள் உட்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாததால் அவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, " ராஜஸ்தான் அரசு மக்கள் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக ரூ.25 லட்சம் மதிப்பில் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவிலேயே வேறு எங்கும் செயல்படுத்தப்படாத திட்டமாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு- ”பொய் சொல்லி மக்களை பிரிக்கும் பிரதமர் மோடி” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி சொன்ன இந்தியர் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்னானது? அதேபோல் ரூ.2 கோடி பேருக்கு வேலை தருவதாகச் சொன்னார். இந்த வாக்குறுதி என்னானது?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மக்களைப் பிளவுபடுத்தக் காங்கிரஸ் கட்சி முயல்கிறது என பிரதமர் மோடி சொல்கிறார். நாங்கள் மக்களைப் பிரிக்கவில்லை. நீங்கள் தான் மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்களைப் பிரிக்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் அனைவருக்கும் உரிய உரிமை கிடைக்கும். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் யதார்த்தத்தைச் சொல்லும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி மக்களைப் பிரிக்கப் பார்க்கிறார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories