இந்தியா

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?

திருமணம் குறித்து ராகுல் காந்தியிடம் மாணவிகள் கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தற்போது ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் இவருக்கு 53 வயது ஆகும் நிலையில், இவரது திருமணம் குறித்து பலரும் இவரிடம் கேட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக இவரது திருமணம் குறித்த பேச்சுகள், கேள்விகள் என தொடர்ந்து இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் ஹரியானாவை சேர்ந்த பெண் விவசாயிகள் ராகுல் காந்தியின் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசினர். மேலும் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அதில் இருந்த பெண் விவசாயி ஒருவர் "ராகுலுக்கு இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை" என்று கேட்டார்.

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?

மேலும் சக பெண்கள், 'சீக்கிரம் ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள்' என்று கூறினர். அதற்கு இதற்கு சிரித்துக்கொண்டே சோனியா காந்தி, "நீங்களே ஒரு பெண்ணை பாருங்கள்.. உடனே திருமணம் செய்துவிடலாம்" கலகலப்பாக கூறினார். இதற்கு பதிலளித்த ராகுல், இதுவும் நல்ல யோசனைதான். நீங்களே பெண் பாருங்கள்" என்று கலகலப்பாக பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ அனைவர் மத்தியிலும் வைரலாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், மீண்டும் ராகுல் காந்தியின் திருமணம் குறித்து அவரிடமே மாணவிகள் கேட்டுள்ளனர். அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மகாராணி கல்லூரிக்கு ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது அவருக்கு அந்த கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அங்கிருக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது அவரிடம் மாணவிகள் பல கேள்வி கேட்டனர்.

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?

அப்போது, "நான் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டபோது, அங்கே லட்சக்கணக்கான இளைஞர்களை சந்தித்தேன். அப்போது அவர்களிடம் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். பலரும் பல வித பதில்களை சொன்னார்கள். அதில் சிலர் பெற்றோர்களுக்காக இதனை செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த மாணவி ஒருவர், "பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்தால், மருத்துவர்கள் ஆகலாம் என்று சொல்லிக்கொடுப்பர். ஆனால் விஞ்ஞானியோ, விண்வெளி வீரர்களோ ஆகலாம் என்று யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை." என்றார். இதற்கு ராகுல் காந்தி "இது மிகவும் தெளிவான கருத்து. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், (இந்திய சமூக மற்றும் கல்வி முறை) உங்களுக்கு, விருப்பங்களை காட்ட மாட்டார்கள். கல்வி முறையில் இதுபோல் அதிக பிரச்னை இருப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?

பின்னர், "நீங்கள் அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருந்திருப்பீர்கள்?" என்று வேறொரு மாணவி கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "அரசியல்வாதியாக இல்லாவிட்டால் ஆசிரியராக, உணவு சமைப்பவராக என பல ஐடியாக்கள் இருந்தன. ஆனால் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன" என்று கலகலப்பாக பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து "நீங்கள் பார்ப்பதற்கு அறிவாளியாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். ஆனால், திருமணம் குறித்து ஏன் யோசிக்கவில்லை.? உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?" என்று சில மாணவிகள் தொடர்ந்து கேள்வி கேட்டனர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நான் எனது வேலையிலும் காங்கிரஸ் கட்சியிலும் முழுமையாகச் சிக்கிக்கொண்டேன். அதனால்தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. என் முகத்தில் சோப்பு போடுவதில்லை. கிரீம்ஸ் தடவுவதில்லை. வெறும் தண்ணீரில் கழுவுவேன்" கலகலப்பாக பேசினார்.

banner

Related Stories

Related Stories