உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் உள்ள பால்ராய் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி(20), இவருக்கு இரு தங்கைகள் இருந்துள்ளனர். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அந்த இளைஞர் அஞ்சலியை காண அவரின் வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்துள்ளது.
அந்த வகையில் நேற்று அஞ்சலியின் வீட்டில் அனைவரும் வெளியே சென்றதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரின் காதலன் வழக்கம் போல அந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அந்த தருணத்தில் திடீரென அஞ்சலியின் இரண்டு சகோதரிகளும் வீட்டுக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் அஞ்சலி தனது காதலருடன் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அறிந்த அஞ்சலி தனது தங்கைகள் இது குறித்து மற்றவர்களிடம் கூறிவிடுவர் என அஞ்சியுள்ளார்.
இதனால் அங்கிருந்த மண் வெட்டியை எடுத்து தங்கைகளை சாராமாரியாக தாக்கியுள்ளார். இதில் தங்கைகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் அஞ்சலி அங்கிருந்து சென்று மற்றவர்களிடம் தனது தங்கைகளை யாரோ கொலைசெய்து விட்டனர் எனக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலிஸார் வந்து இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அக்கா அஞ்சலியே தங்கையை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.