இந்தியா

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !

தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஷமச் செய்திகளைப் பரப்ப 1.50 லட்சம் சமூக ஊடக ஊழியர்களை பாஜக பயன்படுத்தியுள்ளதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறது.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. தங்களின் நூற்றாண்டு கொண்டாடப்படும் போது, இந்தியாவை பா.ஜ.கதான் ஆட்சி செய்ய வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தீட்டியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவின் தாய் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை எப்படியாவது இந்து ராஷ்டிர நாடாக மாற்றிவிட வேண்டும் என சிந்தனையைக் கொண்டததுதான் ஆர்.எஸ்.எஸ். அத்தகைய ஆர்.எஸ்.எஸ்.ஸின் மறைமுக அஜாண்டாக்களை ஆட்சியின் மூலம் திணிக்கும் பணியை 2014ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே செய்யத் தொடங்கியிருக்கிறது பாஜக. இதுதவிர பல மாநிலங்களில் குதிரை பேரம் மூலம் ஆட்சியை கவிழ்த்திருக்கிறது. இன்னும் சில இடங்களில் ஆளும் அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு, சாதி-மத மோதல்கள் மூலமும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள்.

அந்தவகையில் பாஜகவின் தேர்தல் சதியை 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற பிரபல நாளேடு அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஷமச் செய்திகளைப் பரப்ப 1.50 லட்சம் சமூக ஊடக ஊழியர்களை பாஜக பயன்படுத்தியுள்ளதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறது. மேலும் பாஜக, “Python code” என்ற சாப்ட்வேர் மூலம் ஒரு கணினி மூலம் ஒரு கிளிக்கில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேருக்கு செய்திகளை பாஜக அனுப்பியதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இன்னும் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது தி வாஷிங்டன் போஸ்ட்.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக மேற்கொண்ட தேர்தல் சூழ்ச்சிகள் ஏராளம். அந்த சூழ்ச்சிகளைதான் தி வாஷிங்டன் போஸ்ட் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் பாஜக மற்றும் அதன் சங்-பரிவாரங்கள் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் மக்களிடையே மத ரீதியான வெறுப்புகளை விதைத்தை தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தி வாஷிங்டன் போஸ்ட் சில ஆய்வுகளை மேற்கொண்டே அத்தகைய கட்டுரையை தீட்டியுள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் சிலர் பல மாதங்கள் கர்நாடகாவில் தங்கி இருந்து, அங்கிருந்த மக்களிடையே பேசி கருத்துகளைப் பெற்று இத்தகைய ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் கட்டுரையில் துவகத்திலேயே ஒரு நேர்காணல் பதியை வெளியிட்டிருக்கிறது. அதில், கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த அரசு வங்கி ஊழியர் சச்சின் பாட்டீல் சந்தித்து அவரின் வாக்குமூலத்தையும் கட்டுரையில் தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கிறது. அதில், சச்சின் பாட்டீலின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பாஜக தரப்பில் பல செய்திகள் அனுப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு, பாஜக சார்பில் அமைக்கப்பட்ட சாலைகள், புதிதாக கட்டப்பட்ட பள்ளிகள், ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கியது உள்ளிட்டவற்றை செய்தியாக தயாரித்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளது பாஜக.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !

ஆனால் தேர்தல் நெருங்க ஆரம்பித்த நாட்களில் பிரச்சாரத்தின் வடிவத்தையே பாஜக மாற்றியுள்ளது. அதாவது மே மாதத்தில் பாஜக அனுப்பிய குறுஞ்செய்தியில், கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் மக்கள் சிலரால், கொல்லப்பட்ட இந்துக்களின் பெயர் பட்டியலை அனுப்பியிருக்கிறது, அதேபோல், இந்து சிறுமியை லவ் ஜிஹாத் முறையில் இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து அவர்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்து விடுதாகவும் செய்திகள் வந்துள்ளது. மேலும் அந்த செய்தியில், “உங்கள் (இந்து) வீட்டு குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்துக்களின் இந்தியாவை ஆளும் இந்து தேசியவாத பாஜக கட்சிக்கு வாக்களியுங்கள்” என்ற முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். இந்த பிரச்சாரம் இரு இருள்சூழந்த பிரச்சாரமாக இருந்ததாக அந்த சச்சின் பாட்டீல் தெரிவித்திருக்கிறார்.

ஒருநாளைக்கு குறைந்தது 6 வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து 120க்கும் மேற்பட்ட செய்திகள் அவருக்குச் சென்றிருக்கிறது. அந்த செய்தியை படிக்கும் இந்து சமூக மக்கள் அனைவருமே பாஜகவுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் வண்ணம் அவை இருந்ததாகவும் சச்சின் பாட்டீல் கூறியிருக்கிறார்.

மேலும் அக்கட்டுரையில், மத்தியில் பாஜக ஆட்சியை பிடிக்க, சமூக வலைதள ஊடகங்கள் பெரும் பங்கு வகித்துள்ளது. குறிப்பாக மோடி தலைமையில் உள்ள பாஜகவும் அது சார்ந்து இயங்கும் இந்துத்வா அமைப்புகளும் அடிக்கடி பொய் மற்றும் மத ரீதியிலான வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டும் செய்திகளை லாவகமாக பரப்பி தங்களின் அரசியல் பலத்தை உயர்த்திருகின்றனர். இதனால் இந்தியா எல்லைகளை தாண்டி பெரும் வேதனைகளையும், கண்டனங்களையும் பாஜக அரசு பெற்றது. பாஜகவில் சுமார் 18 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது, இவர்களின் வெற்றி மையமாக இருப்பது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செய்தி பரப்பும் இயந்திரங்கள்தான். அந்த செய்தி பரப்பும் இயந்திரங்கள் மூலம் மத சிறுபான்மையின மக்களை ஒடுக்கவும், எதிர்வரும் விமர்சனங்களை நசுக்கவும் செய்துள்ளார்கள் பாஜகவினர்.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !

இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் என்பது அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் வெறுப்புச் செய்திகளை, பதற்றமடைய வைக்கும் செய்திகளைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள் என்பதை தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் பாஜகவினர், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இந்துத்வா அமைப்பினர் என பலரிடம் பேசி கருத்துகளை பெற்று கட்டுரையில் தீட்டியிருக்கிறார்கள்.

அதில் இந்துக்களுடையே அச்ச உணர்வை உண்டாக்கி, அவர்களை மடைமாற்றம் செய்ய சமூக வலைதளப் பதிவுகளை உருவாக்கும் வேலைகளில் பாஜக ஊழியர்கள் பணியாற்றியுள்ளார்கள். மேலும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய மட்டும் சுமார் 1.50 லட்சம் சமூக ஊடக பணியாளர்களை வேலைக்கு பாஜக அமர்த்தியுள்ளது என்பதை தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இத்தகைய கட்டமைப்பு மூலம் மத வெறுப்பு பேச்சு, வதந்தி உள்ளிட்ட வன்மத்தை பாஜகவினர் பரப்பி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி குறித்த தவறான எண்ணங்களை லட்சக்கணக்கான மக்களிடையே கொண்டு சேர்க்கும் வேலையை பாஜக தினசரி மேற்கொண்டுள்ளதையும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பாஜக அதிகாரப்பூர்வ ஆன்லைன் பிரச்சாரம் தாண்டி, பாஜக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தனித்தனியாக இத்தகைய பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளார்கள் என்பதையும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !

இது ஒருபகுதி என்றால், மற்றொரு புறம் சமூக வலைதளத்தில் பாஜகவை விமர்ப்பவர்களை எதிர்க்கொள்ளவும், அவர்கள் பற்றி தவறான தகவல்களை பரப்பவும், ட்ரோல் செய்யவும் வன்மத்தை தூண்டும் செய்திகளை வெளியிடவும் கண்டன்ட் கிரியேட்டர்ஸ் மூலம் விமர்சித்து வந்துள்ளனர். இந்த கண்டன்ட் கிரியேட்டர்ஸ் பணி என்பது, காங்கிரஸ் கட்சியை தவறாக சித்தரிப்பது, மோசமான கார்டூன் தீட்டுவது, இஸ்லாமிய சமூகத்தை பற்றி அவதூறு பரப்புவது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் தரப்பு கொலை செய்துவிட்டதாக போலி செய்தி உருவாக்குவது, இதற்கு தீர்வு இந்து தேசியவாதக் கட்சி பாஜகதான் என விளம்பரப்படுத்துவது போன்றவையாகும்.

தி வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் இன்னும் சில நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வாட்ஸ்ஆப் பாஜகவுக்கு பெரிதும் உதவியிருக்கிறது. அதனால் இந்திய அரசியலில் வாட்ஸ்ஆப் பங்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரண் கரிமேலாவும் நேர்காணலை மேற்கொண்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது. அதில் பேராசிரியர் கிரண் கரிமேலா பல திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார். அதாவது பாஜக செய்யும் பிரச்சாரங்களை போல பிற கட்சிகளும் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முறையாக பயன்படுத்தில் பாஜக மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கர்நாடக மாநில தேர்தல் காலங்களில் வெறுப்புணர்ச்சி - வன்முறையை தூண்டும் அவதூறு செய்திகளை அஸ்திரம் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். உண்மையில் வாட்ஸ் ஆப்பை அஸ்திரமாக மாற்றி இருக்கிறது பாஜக. அவர்கள் சொல்லும் அஸ்திரத்தை உருவாக்கியது யார், எங்கிருந்து வந்தது என்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. அதனால் அந்த அஸ்திரத்தை பாஜகவினர் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இதுதொடர்பாக உடுப்பி மாவட்டத்தில் பாஜக சமூக ஊடக நிர்வாகி சுதீப் ஷெட்டியும் இதனை ஒப்புக்கொண்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது. சுதீப் ஷெட்டியிடம் நடந்த நேர்காணலில், “அஸ்திரம்தான் எங்கள் ஆயுதம். பாஜகவுன் அதிகாரப்பூர்வ அல்லது சொந்த கணக்குகளைவிட இந்த அஸ்திரத்திற்கு வலிமை அதிகம்” என அவர் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து மங்களூர் பாஜக சமூக ஊடக நிர்வாகி அஜித் குமார் உல்லாலிடமும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டிருக்கிறார்.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !
சுதீப் ஷெட்டி

அஜித் குமார் உல்லால் கூறுகையில், கடற்கரையோரம் உள்ள மாவட்டங்களில் சமூக ஊடகத்தின் வழியாக பிரச்சாரத்தை எளிதாக மேற்கொண்டுவருகின்றோம். அதற்கு அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் 9 தன்னார்வலர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்படும். மேலும் தன்னார்வலர்கள் கீழ் ஒரு குழு உருவாக்கப்படும். அந்த குழுவில், துணைத் தலைவர், காப்பி ரைட்டர், கிராபிக் டிசைனர் (copy writer, graphic designer, photographer) உள்ளிட்ட சிலர் இடம் பெற்றிருப்பார்கள். அவர்கள் புகைப்படங்கள், வீடியோ மற்றும் லோகோ போன்றவையை தயாரித்து வாட்ஸ்-ஆப்பில் அனுப்பும் வண்ணம் உருவாக்க வேண்டும்.

இன்னும் சில குழுக்களில் உள்ள சிலர் வீடுவீடாகச் சென்று தகவலை சேமித்து சிலரை பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுவில் சேர்ப்பார்கள். பொறுப்பாளர்கள் குறைந்தது 200 வாட்ஸ்-ஆப் குழுவில் இருப்பார்கள். தேர்தல் தொடக்கத்தின் பாஜக அரசு செய்த சாதனைகள், திட்டங்களை கூறுவோம். ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலவிதமான பொய்ச் செய்திகள், உணர்வுகளை தூண்டும் செய்திகள் பிரச்சாரம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்-ஆப்பில் இத்தகைய செய்தியை பாஜக புதிதாக செய்யவில்லை. கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பைத்தான் கோட் (python code) என்ற மென்பொருள் மூலம் ஒரு கணனியில் இருந்து ஒரே கிளிக்கில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு செய்திகளை அனுப்பும் முறையை பாஜக கையாண்டிருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இன்று வாட்ஸ்-ஆப்பின் மெட்டா நிறுவனம் கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளால் மொத்தமாக ஃபார்வேர்டு செய்யும் முறை குறைந்துள்ளதாகவும், இதனால் பல வதந்திகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, குறிப்பாக இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் பரவும் போலி செய்திகளினால் கும்பல் கொலைகள் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவது என்பது அதிகரித்தது.

போலி செய்திளை பரப்ப 1.50 லட்சம் பேர்.. பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த the washington post : பகீர் தகவல் !
அஜித் குமார் உல்லால்

இத்தகைய சூழலில் 2020ம் ஆண்டும் மெட்டா நிறுவனம் சார்பில் இந்தியாவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயனாளிகள் பெரும்பாலானோர் ஏராளமான செய்திகள் இருதரப்பு மக்களிடையே மோதலை உருவாக்கும் நோக்கில் பகிரப்படுகிறது. முஸ்லிம் மக்களை குறி வைத்து வெறுப்பு பரப்பப்படுகிறது என கூறியிருக்கிறனர். இதுகுறித்து மெட்டாவின் செய்தித்தொடர்பாளர் பிபாசா சக்ரவர்த்தியிடம் தி போஸ்ட் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டுள்ளார். அப்போது கர்நாடகத் தேர்தலில் போலி செய்தி பரப்பப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிபாசா சக்ரவர்த்தி, வாட்ஸ் ஆப் செய்திகளை பகிரும் போது அவை மற்றவர்களால் ஜேஜ் செய்ய முடியாது. யாருக்கு என்ன செய்தி சென்றது என்பதை கண்காக்க முடியாது. அதனால் அதனை பாதுகாப்பாக உணர்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

நாம் தேர்தல் களங்களில் பார்க்கும் பிரச்சாரத்தைத் தாண்டி பாஜக பல மோசமான சதி செயல்களில் இறங்கியிருப்பது தி வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் மூலம் தெரியவந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories