இந்தியா

Email-ல் வந்த ஜாமீன் உத்தரவு, திறந்து பார்க்காத சிறை அதிகாரிகள்: 3 வருடம் சிறையில் இருந்த இளைஞர்!

நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சிறை அதிகாரிகளின் கவனக்குறைவால் இளைஞர் ஒருவர் 3 வருடங்கள் தேவையில்லாமல் சிறையில் இருந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

Email-ல் வந்த ஜாமீன் உத்தரவு, திறந்து பார்க்காத சிறை அதிகாரிகள்: 3 வருடம் சிறையில் இருந்த இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வருடம் தான் கொரோனா தொற்று பரவியதால் வழக்குகள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று வந்தது.

இதனால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் ஆன்லைனின் நடைபெற்றுள்ளது. பின்னர் இவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டு, அந்த உத்தரவுகளைச் சிறை நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளது.

Email-ல் வந்த ஜாமீன் உத்தரவு, திறந்து பார்க்காத சிறை அதிகாரிகள்: 3 வருடம் சிறையில் இருந்த இளைஞர்!

ஆனால் இந்த மின்னஞ்சலைச் சிறை அதிகாரிகள் திறந்து பார்க்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தன்ஜி தாக்கூர் ஜாமீன் கிடைத்தும் 3 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீண்டும் ஜாமீன் கேட்டு முறையிட்டபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் எம்.ஆர்.மெங்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் கிடைத்தும் 3 வருடங்கள் சிறையிலிருந்த குற்றவாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த இழப்பீட்டை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories