இந்தியா

ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவன்.. தனி அறையில் வைத்து அடித்து கொடுமை படுத்திய ஆசிரியர்கள்!

டெல்லியில் பாடம் நடத்தும் போது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவனை நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவன்..  தனி அறையில் வைத்து அடித்து கொடுமை படுத்திய ஆசிரியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுபம் ராவத் என்ற மாணவர் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்த போது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துள்ளார்.

இதை கவனித்த ஆசிரியர் சுபம் ராவத்தை அருகே அழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். அப்போது அவர் அழுது கொண்டே ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் சுபம் ராவ்த்தை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவன்..  தனி அறையில் வைத்து அடித்து கொடுமை படுத்திய ஆசிரியர்கள்!

அப்போது அங்கு வந்த மேலும் மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு மாணவனை மீண்டும் அடித்துள்ளனர். பிறகு சுபம் ராவத் பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது உடலிலிருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் என்ன நடந்தது என் விசாரித்துள்ளனர்.

பின்னர் மாணவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் அந்த நான்கு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories