இந்தியா

40 மாடி கட்டடத்தில் இருந்து சட்டென்று அறுந்து விழுந்த LIFT.. 7 பேருக்கு நேர்ந்த விபரீதம்: அதிர்ந்த மும்பை

40 மாடி கட்டடத்தில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 மாடி கட்டடத்தில் இருந்து சட்டென்று அறுந்து விழுந்த LIFT.. 7 பேருக்கு நேர்ந்த விபரீதம்: அதிர்ந்த மும்பை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அமைந்திருக்கும் தானேவில் அமைந்துள்ளது பால்கம் என்ற பகுதி. இங்கு 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப்பணி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு என்று அங்கே லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் பணியாளர்கள், கட்டுமான பணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அதில் எடுத்து சென்று வந்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று மாலை அந்த கட்டிடத்தில் இருந்து பலமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்க பதறியடித்து சென்று பார்த்தபோது, 40 மாடி கட்டடத்தில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. தொழிலாளிகள் தங்கள் பணிகளை முடித்து விட்டு கிளம்ப தயாராக இருந்த போது லிப்ட் அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

40 மாடி கட்டடத்தில் இருந்து சட்டென்று அறுந்து விழுந்த LIFT.. 7 பேருக்கு நேர்ந்த விபரீதம்: அதிர்ந்த மும்பை

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கும், ஆம்புலன்சுக்குக்ம், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அறுந்து விழுந்த லிப்டுக்குள் சிக்கியிருந்த தொழிலாளிகளில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மீதம் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அறுந்து விழுந்த லிஃப்ட் கடந்த மாதம் 23-ம் தேதிதான் பழுதுபார்க்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

40 மாடி கட்டடத்தில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories